வான்புகழ் வள்ளுவர்


 ‘தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள் அள்ளுதொறும்

சுவைஉள்ளதொறும் உணர்வாகும் வண்ணம் கொள்ளும் அறம் - 

பொருள் -  இன்பம் அனைத்தும் கொடுத்த திருவள்ளுவரை

பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே…………’ என்னும் அருமையான

பாடல் போல வள்ளுவன் தமிழுக்கு பெருங்கொடை! 

ஆம் ! 

1330 அருந்தமிழ் குறட்பாக்கள் ,133  அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

திருக்குறள் ஆனது அழகும் அறிவும் சேர்ந்த  நூல்…….பொருளும் பெருமையும் 

இணைந்த நூல்……. வாழ்வும் வளமும் நிறைந்த நூல்…………. ஏன்?     இனம்,

மதம், மொழி கடந்த பொதுமை நூல்………... ஆஹா!   வள்ளுவனின் பெருமைதான்

என்னே!!   தாய்மொழியின் சிறப்பு தான் என்னே…!! 

 திருமயிலாப்பூரில் , ஆதி பகவனும் பெற்றெடுத்து,  வள்ளுவர் சேனையில் வளர்ந்து,

வள்ளுவன் என்ற பெயர் பெற்ற இவரை பொய்யாமொழிப்புலவர், செந்நாப்போதர்,

மாதானுபங்கி , முதற்பாவலர்  எனப்பல பெயர்களால் அழைக்கிறோம்.

‘தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் -தோன்றலின்

தோன்றாமை  நன்று’          என்ற திருக்குறளுக்கு ஏற்ப  தோன்றி , இன்றும் 

வான் புகழ  வாழ்ந்துகொண்டிருக்கும் வள்ளுவனின்  பெருமைக்கு   ஈடு இணை

உண்டோ…  அறம் -பொருள் - இன்பம் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் பிரித்த

பெருமையோ பெருமை. 


அன்பானவர்களே,

ஒழுக்கம் ஒழுக்க  இலக்கணமாம்  எனக் கூறினர். குடிமை என்பது குடிகளின் தன்மையே எனவும் கூறினார். எத்தனை எத்தனை புதுப்புது அர்த்தங்கள்!  அணுவைத் துளைத்து ஏழ்  கடலை புகுத்தி குறுகத் தறித்த  குறள் ஆகி எந்த வயதினரும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் செம்மையாய் அமைந்த நூல் திருக்குறள் என்றால் அது தவறாகுமா ?

 

 திருக்குறளை மொழிபெயர்த்த திரு. எல்லிஸ் துரை அவர்கள் ‘ திருவள்ளுவர்

பெயர்  தெய்வசிற்பி  அருட்குறள் நூல்  உரைப்பாவனுக்கு  தங்கு பலநூறு தாரண

கடலை பெய் தீங்கு வீசுவதனி விளைங்க மொழி பெயர்த்தேன்’- என்கின்றார்.


 பாரதிதாசன்  அவர்களும்,    

வானுக்கு செங்கதிர்  ஒன்று 

புனல் வன்மைக்கு காவிரி ஒன்று

 நல்ல மானத்தைக் காத்து   வாழ் -எனும் இவ்வையகத்திற்கு ஒன்று திருக்குறளே   என வியந்து நிற்கின்றார்..


திருக்குறள் ஆனது எந்த காலத்திற்கும், எந்த நேரத்திற்கும், எந்த தேவைக்காகவும்,

எந்த  உவமைக்காகவும்பயன்படுத்தக்கூடிய வகையில் ஈர் அடிகளில் 

உலகை அளந்தபெருமை உடைய நூலாகும்.உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள

இலக்கிய நூல்களில் முதலாம் இடத்தையும் பொது நூல்களில்

மூன்றாம் இடத்தையும் நம் திருக்குறள் பெற்றிருப்பது என்பது

தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்கின்ற விடயமாகும்.


கன்னல் இதுவென காட்டியே மக்கள் இன்னும் ஒரு இன்னல்

தராது என்பது போல்  பன்னல் உடையது வள்ளுவர் முப்பால்

பனுவல்அன்றோ….


 

Post a Comment

Previous Post Next Post

Android