தேசபக்தியின் ஊற்று சுவாமி விவேகானந்தர்
‘எவன் ஒருவன் மக்களுக்கு தொண்டு செய்வதில் தலைசிறந்தவராக
இருக்கின்றான் அவனே உண்மையான அரசன்’ என்றார் இந்தியாவின்
அகிம்சாவாதி மகாத்மா காந்தி.
ஆம் ! இந்த இலக்கணத்திற்கு மொத்த வடிவமாக உருவெடுத்தனர்
சுவாமி விவேகானந்தர்.1863 ஆம் ஆண்டு தை மாதம் 12ஆம் திகதி
கல்கத்தாவில் நரேந்திரன் என்னும் திருநாமத்துடன் அறியப்பட்டார்.
துடிப்பு மூர்க்கத்தனமும் அறிவுக்கூர்மையும் அபார நினைவாற்றலும்
ஆன்மீக பற்றும் இணைந்து கடுமையான போராட்டத்தின் பின்னர் இந்திய
தேசத்தின் மீது எல்லையற்ற பக்தி கொண்டார். நெடிய உருவம்,
அகன்ற நெற்றி , பரந்த கண்கள் ,ஒளி வீசும் பார்வை ,மிடுக்கான
நடை………….. அரசாள வேண்டியவர், ஆனால் துறவாடை அணிந்த
துறவி. உலகத்தை துறக்காது உலகத்துக்காக வாழ்ந்தவர்.
இவர்தான் விவேகானந்தர்.
பகவான் இராமகிருஷ்ணரின் அருள் மொழிகளையும் அற்புத
சாதனைகளையும் அறிந்து அவரால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரம்
பக்த கோடிகளில் சுவாமி விவேகானந்தர் தனிச்சிறப்பானவர்.
ஆன்மிக பக்தி என்கின்ற அன்பு பெருக்கையும் தாண்டி நடந்து
தேசபக்தியின் ஊற்றாக அதன் கொடுமுடியைத்தொட்டவர் சுவாமி விவேகானந்தர்.
உண்மையில் விவேகானந்தர் ஆன்மிக பக்தி கொண்டவராகவே
அறிமுகமானார். இறை அனுபவத்தை நேருக்கு நேர் காண துடித்தார்..
இறைவன் பற்றிய கேள்விகளுக்கு விடை காண முயன்றார். இரும்பை
கவரும் காந்தம் போல, கரணை நாடும் கன்றினை போல இறைவனை
நாடினார். ஆன்மீக வலையில் அகப்பட்டார், சிக்கிக் கொண்டார்….
ஆன்மிக அனுபவத்தில் ஊறிப்போன இந்த மனிதன்தான் ‘ எழுமின்,
விழிமின், உணர்மின் ‘என இளைஞர்களை தட்டி எழுப்பி தேசபக்தியின்
ஊற்றாக பிரகாசித்தார்.
‘‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அவர்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே…….’ எனப் பாடினார் தமிழ்நாட்டின் நவீன கவிதையின் பிதாமகன், நாட்டுப்பற்றாளர் பாரதியார்…. தேசபக்தி, பாரதியின் உள்ளத்தில் இருந்து சிலர் நடந்ததைப் போலவே தன் தேசம், தன் நாடு என்பதை விவேகானந்தரின் நாவில் ஒலிக்கும் பல்லவியாக, நாளாந்த உச்சாடனம் ஆக கருக்கொண்டது.
ஏழைகளைக் கண்ட மாத்திரத்தில் விவேகானந்தரின் உள்ளம் புழுப்போலத் துடித்தது. மெழுகு போல உருகியது. தன் நாட்டில் உள்ள ஏழை மக்களின் வாழ்வுக்காக பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்குச் சென்றார். சென்ற நாடுகளில் அவமானப்பட்டார். பெற்ற தாயை பக்திச்சிரத்தையோடு போற்ற வேண்டும் எனக்கூறும் விவேகானந்தர், அதற்கும் மேலாக தாய்நாட்டை
உயிராக நேசித்தார். துறவுக்கு முக்கியம் கொடுத்த நாட்டிலிருந்து
செல்வந்த நாட்டிற்கு புறப்பட்டார். என்னதான் ஆனாலும் தன்மானத்
துறவி அல்லவா விவேகானந்தர் ….. ?அமெரிக்காவில் ஆத்ம ஞானத்தை
அளித்துவிட்டு அதற்குப் பதிலாக உதவிகளைப் பெற்று வந்து ஏழைகளை
வாழ்வித்தார். என்னையும் என் மனைவியையும் மக்களையும் படைத்த
கடவுள் காப்பாற்றுவார் என்ற சிந்தனையை மனதில் இரும்பாக
நிலைநிறுத்தி மக்கள் தொண்டு செய்த உண்மை சேவகன் அல்லவா
விவேகானந்தர்………..?
சிக்காகோ நகரில் சென்றபோது பஞ்சனையில் படுத்துறங்க ஏற்பட்டது.
உறங்குவாரா விவேகானந்தர் ? பஞ்சனையும் முட்படுக்கையாகக்குத்தியது.
தாய் நாட்டு மக்களின் வறுமை க்கோலம் கண்களின் முன் வந்து நின்றது.
‘ எனது பூமி வறுமையால் எரிந்து கிடக்கின்றது. எனக்கு புகழ் எதற்கு…
பெயர் எதற்கு… இந்திய பாமர மக்களை யார் தூக்கிவிட போகின்றார்கள் ‘ என்றல்லவா துடித்தார்….
சுயராஜ்ஜியம் இல்லாத மக்கள் அந்நிய நாடுகளில் கேவலமாக
நடத்தப்படுவதை கண்டார். இந்த எண்ணச்சுளிப்பு ,அவருக்குள்
ஏற்பட்ட சுதந்திர தாகம் ‘தேசபக்தி’ என்கின்ற தீயை பற்ற வைத்தது.
செல்வம் பூண்டி புரளும் குபேர பூமியில் ஒரு பிடி சோறு, ஒரு துண்டு
ரொட்டி கிடைக்காது அவமானப்பட்டார் இந்திய தேசம் அடிமையாக
கிடப்பது தான் இதற்கு காரணம் என்பதை உணர்ந்தார். பிச்சைக்காரன்
வீட்டுக்கு வந்து பாத்திரம் ஏந்தினால் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த
பொருட்களை எல்லாம் கொடுக்கும் இரக்க குணமும் தியானப் பயிற்சியும்
கடவுள் பக்தியும் கொண்ட இவர்தான் தேசபக்தி யாளராக உருவானார்.
சுவாமி அவர்கள் சென்னையில் நிகழ்த்திய சொற்பொழிவில் இங்கு
கூறியாக வேண்டும். ‘ தேசபக்தி தேசபக்தி என்று சொல்லுகின்றார்கள்
நான் கூட தேசபக்தன் தான் எனக்கு கூட தேச பக்தியிலே நம்பிக்கை
இருக்கின்றது பாரத நாட்டு மக்களின் மிருகங்களுக்கு அடுத்தபடியான
வாழ்க்கையினை வாழ்கின்றார்கள் பசியினால் வாடுகின்றார்கள்’ என வேதனைப்பட்டு அப்பிணி தீர்க்க , பசிநோக்காது, மெய்வருத்தம்
பாராது, கண் துஞ்சாது உன்னதமனிதனாக உலக நாடுகளிடம் சென்று
உதவி பெற்று பசியைப் போக்கிய மருத்துவன்- நம் விவேகானந்தர்.
‘ யாருடைய இதயம் ஏழை மக்களுக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கின்றதோ,
அவரை மகாத்மா என்பேன் இல்லையேல் அவர் துராத்மா’ என்கின்ற எண்ண
ஓட்டமே இவரின் குருதியோடு சுற்றிச் சுழன்று ஓடியது. குமரி முனையில் உள்ள
ஒரு சிறிய பாறையில் தியானத்திற்கு பிறகு விவேகானந்தர் விழிக்கின்றார்.
அவரின் மெய்சிலிர்த்தது. கண்கள் நீரை பெருக்கின.‘எனது தாய்நாடு எனது தாய்நாடு’ என்ற வார்த்தைகளே வாயிலிருந்து வெளிவந்தன.
உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும் என்று
தேசபக்தியின் அடிப்படைக் கோஷம் அவரின் அணுதோறும் நிரம்பி வழிந்தன.
‘இந்தியாவின் மண் என்னுடைய மேலான மோட்ச லோகம். இந்தியாவின்
நன்மையை என்னுடைய நன்மை. சகோதரா! இதனை அடிக்கடி சொல்லு.
தினந்தோறும் சொல்லு. இரவு பகலாய் சொல்லு. பிரார்த்தனை செய்…….’
என்ற வீர ஆவேசம் மொழிகளில் உறைந்து கிடப்பது என்ன….
‘தேசபக்தி’. ஆம், ஆன்மீகத் துறவியின் அற்புத வரிகள்
தாயான புவனேஸ்வரி மாதா, அப்போதும் என்ன சொல்லுவார் தெரியுமா?
உறுதியோடு இரு ! அசைந்து கொடுக்காதே! மற்றவர் உணர்ச்சிகளை
மதித்து நட! ஆஹா… அதுவே தாய் முலைப்பால் ஆக விவேகானந்தரிடம்
வந்து சேர்ந்தது. தேச பக்தி என்னும் மாளிகையின் வாசல் கதவுகளை திறக்க
வைத்தது.
ஆம்! ‘இந்தியாவை காப்பாற்றியவர் சுவாமி விவேகானந்தர்’ என்றார் மூதறிஞர் ராஜாஜி. ஆயிரம் வருடங்கள் வாழ வேண்டிய வாழ்க்கையை
நாற்பது வருடத்துக்கு உள்ளேயே வாழ்ந்து விட்டு சென்றார் விவேகானந்தர்.
கல்வியையும் பண்பாட்டையும் இந்திய தர்மத்தையும் உலகறியச் செய்தது
மட்டுமல்லாது ‘ பிள்ளை வரம் வேண்டி தவம் இருந்தேன். பரமேஸ்வரன்
பூதங்களில் ஒன்று அல்லவா அனுப்பிவிட்டார்’ என புவனேஸ்வரி அம்மாள் சலித்துக் கொண்ட இந்தப் பிள்ளைதான்..,
இந்த நரேந்திரன் தான்.., சுவாமி விவேகானந்தர் என்று தேசபக்தியின்
ஊற்றாய் விளங்கினார். அவர் வழியில் நாமும் செந்தமிழ் நாட்டில் பற்றும்
அதன் சீருக்கு உகந்த தொண்டும் செய்வோம்…
என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்..
Post a Comment